Tuesday, July 22, 2014


மாஸ்கோ: உக்ரைனின் வான்பரப்பில் கடந்த வாரம் ஒரு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு, சில நிமிடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் உக்ரைனிய போர் விமானம் ஒன்று, அந்த மலேசிய விமானத்துக்கு அருகில் பறந்து கொண்டிருந்தது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைன் அரசிடமிருந்து இப்போது ரஷ்யா விளக்கம் ஒன்றைக் கோரியுள்ளது. மலேசிய விமானம் பயணித்த பாதையில் எந்தவொரு ஏவுகணைத் தாக்குதலும் நடந்ததாக தம்மால் கண்டறிய முடியவில்லை என்றும், கிளர்ச்சியாளர்களுக்கு 'பக்' வகை ஏவுகணைகளைத் தாங்கள் அளிக்கவும் இல்லை என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

காஸ்ஸா: காசா நகரத்தில் மருத்துவமனை ஒன்றில் இஸ்ரேலிய படைகள் நடத்திய கொடிய ஷெல் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டும், குறைந்தது ஏழு பேர் காயமடைந்தும் இருக்கின்றனர். காயமடைந்தவர்களில் பெரும்பான்மையானோர் மருத்துவப் பணியாளர்கள். நகரின் கிழக்கேயுள்ள அல் அக்ஸா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அறைகள், வரவேற்பறை போன்ற இடங்களில் ஷெல் குண்டுகள் விழுந்ததாக சம்பவத்தைக் கண்டவர்கள் கூறுகின்றனர்.

புதுடெல்லி: மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்னர் ஆட்சியில் இருந்த போது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சியின் நெருக்குதலால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வெளியிட்ட கருத்து பற்றி விவாதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தியதால், நாடாளுமன்ற இரு அவைகளிலும் திங்கள்கிழமை கடும் அமளி ஏற்பட்டது. மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் திங்கள்கிழமை தொடங்கியதும் அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை, “தமிழ்நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை நீதிபதியாக நியமிக்க ஓர் அரசியல் கட்சி நெருக்குதல் கொடுத்துள்ளதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கருத்து வெளியிட்டுள்ளார். அதுபற்றி கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க நான் நோட்டீஸ் கொடுத்துள்ளேன்’ என்றார்.
பெங்களூர் குண்டுவெடிப்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள கிச்சான் புகார் தற்போது கல்லீரல் பாதிக்கப்பட்டு, உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வருகிறார். அவருக்கு சிகிச்சை கூட அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கிச்சான் புகாரிக்கு தனியார் மருத்துவமனையில் சிக்ச்சை அளிக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனித நேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. 

காஸா முனைப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நாடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது. காஸா மீதான தாக்குதலை நிறுத்தப்போவது இல்லை என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காஸா முனை அந்த நாட்டின் ஹமாஸ் தீவிரவாதிகள் வசம் உள்ளது. இவர்கள் அண்டை நாடான இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 8–ந்தேதி இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.
டெல் அவீவ்: தரைப்போரை துவக்கிய பிறகு ஆபீஸர் உள்பட 27 இஸ்ரேலிய ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவத்தினரை மேற்கோள்காட்டி அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளையில் இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஃபலஸ்தீன் போராளி இயக்கங்கள் ராக்கெட் தாக்குதலை தொடருகின்றன. திங்கள் கிழமை அல்-கஸ்ஸாம் போராளிகளுடன் நடந்த மோதலில் இஸ்ரேலிய ராணுவவீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதிச் செய்துள்ளது.
Melapalayam Voice. Powered by Blogger.

Search The Voice

Loading...

Popular Posts

Visitors From Other Country


counter

Visitors From Cities


web widgets